Wednesday, April 18, 2012

அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலி)

أم المؤمنين عائشة بنت أبي بكر رضي الله عنهما
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலி)
சிறப்புப் பெயர்கள்
இவர்களின் சிறப்புப் பெயர் ஸித்தீக்கா, ஹுமைரா என்பவை ஆகும். இவர்களின் சகோதரி அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பிறந்த பின்னர் இவர்களை உம்மு அப்துல்லாஹ்என பெருமானார்(ஸல்) அவர்கள் புனைப்பெயரால் அழைத்து வந்தார்கள்.
பிறப்பு
நபி(ஸல்)அவர்களுக்கு நபித்துவம் வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் அபூபக்ர்(ரலி) உம்முரூமான் (ரலி) தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள். எனவே இவர்கள் பிறக்கும் பொழுது இவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
சகோர சகோதரிகள்
இவர்களுக்கு மூன்று சகோதரர்களும்,இரண்டு சகோதரிகளும் உண்டு.இவர்களில் அப்துர் ரஹமான்(ரலி) சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர். அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார்.இரண்டு சகோதரிகளும் அபூ பக்ர் (ரலி)அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள்.அஸ்மா(ரலி) அவகள் குதைலா என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்தூம்(ரலி) என்பவர் நானகாவது மனைவி உம்மு ஹபீபா(ரலி)வுக்கும் பிறந்தவர்கள்.
அறிவாற்றலும் நினைவாற்றலும்
தந்தை அபூபக்கர்(ரலி) அவர்களைப் போன்றே ஆயிஷா(ரலி) அவர்களும் அறிவுக் கூர்மை பெற்றவராகத் திகழ்ந்தார்கள். முழுக்குர்அனையும் மனனம் செய்த இவர்கள் 2210 நபிமொழிகளை உலகிற்கு வழங்கி உலகிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்கள். மார்க்கச் சட்டங்கள் என்னும் ஃபிக்ஹுக் கலையிலும், பாகப்பிரினை என்னும் ஃபராயிள் சட்டவிளக்கங்களிலும் தேர்ந்தவர்கள். அரபுநாட்டு வரலாறு, கவிதைகள், பழமொழிகள், வம்சா வழித்தொடர்கள் ஆகியவற்றை அதிகமதிகம் அறிந்தவர்கள். இவர்கள் அபார நினவாற்றலைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி),இப்னு உமர்(ரலி)போன்ற அறிவு மேதைகள் தங்களின் நினைவாற்றலை இவர்களிடமே உறுதி செய்து கொளவார்கள்.
திருமணம் பற்றி கனவு.
இவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன் மூன்று முறை கனவில் கண்டனர். ஒரு வானவர் இவர்களை முகமூடியால் மூடி நபி (ஸல்) அவர்களின் முன் கொணர்ந்து   ”இவர் உம் மனைவிஎன்று கூறினார். முகத்திரையை நபி (ஸல்) அவர்கள் திறந்து பார்க்கும் பொழுது அவர்கள் ஆயிஷா அவர்களாக இருந்தனர். இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்தால் இது அப்படியே நடக்கும் என்றும் கூறினார்கள். (புகாரி: 5125)
அறிவுச் சடர் ஆயிஷா அவர்களைப் பற்றித் தெரிந்திருந்த கவ்லா பின்த் ஹக்கீம்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களைப்பற்றி நபியவர்களிடம் கூறி திருமணம் செய்து வைக்கிறார்கள். அப்போது ஆயிஷா அவர்களுக்கு ஆறு வயது. கதீஜா (ரலி) அவர்களுக்குப்பிறகு முதன் முதலில் திருமணம் முடிக்கப்பெற்றவர் ஆயிஷா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆயினும் மணவாழ்க்கையில் ஈடுபட்டது ஸவ்தா(ரலி) அவர்களுக்குப் பிறகுதான்.
சிறுவயதில் திருமணம்
அக்கால அரபு நாட்டில் சிறுவர் சிறுமியருக்கு மூன்று வயது முதல் ஆறு வயதுக்குள் மணம் பேசி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த வழமைப்படி தான் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் , உம்மு ரூமானுக்கும் முழு சம்மதம் என்றாலும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு ஒரு ஐயம் எழுந்தது.என் மகள் நபி (ஸல்) அவர்களுக்கு சகோதரரின் மகளாயிற்றே. எவ்வாறு மணம் செய்ய முடியும்? என்று ஹாலா அவர்களிடம் கேட்டனர்.அதற்கு நபியவர்கள் அவர் எனக்கு சகோதரர் என்பது இஸ்லாமிய சகோரரே அன்றி உடன் பிறந்த சகோதரரல்லவேஎன்று சொல்லி அனுப்பினர்.
பின்னர் ஹிஜ்ரத்திற்குப்பின்னர் அவர்களின் ஒன்பதாவது வயதில் நபி(ஸல்) அவர்கள் மணவாழ்க்கை நடத்தினர்.(ஹதீஸின் சுருக்கம்: ஆதாரம் புகாரி 3894,முஸ்லிம்,அஹ்மத்:25823)
ஆயிஷா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களை ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்தில் உறவு கொண்டார்கள். (முஸ்லிம்:2551). ஷவ்வால் மாதத்தில் திருமணம் நடத்துவது கூடாது என்று கூறுவோருக்கு இது மறுப்பாகும்.
சிறுமிகளை திருமணம் செய்யலாமா?
சிறுவயதில் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுவிட்டது.
மேலும்,
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقاً غَلِيظا
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ளமுடியும்? (அல்குர்ஆன்:4:21)
திருமணம் என்பது ஒரு பெண் ஆணிடம் எடுக்கும் உறுதியான உடன்படிக்கை என்று இவ்வசனம் கூறுகிறது.உடன்படிக்கை எடுக்கும் போது அது என்ன என்பது உடன்படிக்கை எடுக்கும் இருவருக்கும் தெரியவேண்டும்.சிறுமியாக இருந்தால் உடன்படிக்கை என்னவென்பது தெரியாது. எனவே, சிறுமிகளின்  திருமணம் இவ்வசனத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பின்வரும் நபிமொழியும் இதற்கு சான்றாக உள்ளது.
நபி(ஸல்) அவர்கள், கன்னி கழிந்த பெணணை அவளது (வெளிப்படையான) உத்தரைவைப் பெறாமல் மணமுடிக்கவேண்டாம்.கன்னிப்பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) சம்மதம் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம். என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எவ்வாறு கன்னிப் பெண்ணின் அனுமதி    (யைத் தெரிந்து கொள்வது?) என்று மக்கள் கேட்டார்கள். (உடனே) நபி (ஸல்) அவர்கள் அவள் மெளனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று கூறினார்கள். (புகாரி: 5136)
திருமணத்தில் மணமகளின் சம்தத்தைப் பெறச் சொன்ன நபி (ஸல்) அவுர்கள் கன்னிப் பெண்ணையும், விதவைப் பெண்ணையும் குறிப்பிட்டார்கள். ஆனால், பருவ வயதை அடையாத சிறுமியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சிறுமியைத் திருமணம் புரியலாம் என்றிருந்தால் அச்சிறுமியிடம் சம்மதம் பெறவேண்டுமா? அல்லது வேண்டியதில்லையா? என்பதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கவேண்டும். இதிலிருந்து சிறுமியைத் திருமணம் புரிதல் இஸ்லாத்தில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மஹர் தொகை.
நபி(ஸல்) அவர்கள் 500 திர்ஹம் மஹர் கொடுத்து ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.ஆயிஷா(ரலி) அவர்கள் உட்பட எல்லா மனைவியருக்கும் 500 திர்ஹம் மஹர் கொடுத்தார்கள் என்று முஸ்லிம் அபூதாவூது, இப்னு மாஜா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதாவது 12.5 ஊகியா அளவாகும்)சிலர்  இதை 400 திர்ஹம் என்று கணக்கிட்டுள்ளனர்).
நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஆயிஷா(ரலி) அவர்கள் மிகவும் அழகுள்ளவராக இருந்தார். (புகாரி:5218)
உம்முல்முஃமினீன் அன்னை ஆயிஷா (ரலி)
வ.எ
முக்கியக் குறிப்புகள்
விபரங்கள்
ஆண்டுகள்
01
பெயர்
ஆயிஷா

02
சிறப்புப்பெயர்
ஹுமைரா,ஸித்தீக்கா

03
தந்தை பெயர்
அபூபக்ர் இப்னு அபீ குஹாஃபா(ரலி)

04
தாயார் பெயர்
உம்மு ரூமான் (ஸைனப்)

05
பிறந்த ஊர், தேதி
மக்கா
ஹிமு-9
06
திருமண ஊர்,தேதி
மதீனா
ஹிபி-1
07
மஹர்
400 திர்ஹம்

08
கணவர்
முஹம்மது நபி (ஸல்)

09
திருமணக் காரணம்
இறைவன் காட்டிய கனவு,



அபூபக்கருடன் உறவை பலப்படுத்துதல்

10
குழந்தைகள்
இல்லை

11
இறந்த ஊர்,தேதி
மதீனாவில் ரமளான் மாதம்
ஹிபி-58
12
அடக்கம்
ஜன்னத்முல் பகீஹ்.மதீனா

13
சிறப்பு அம்சம்
மனைவரில் இவர் ஒருவரே கன்னிப்பெண்.

 

அபார அறிவாற்றல் பெற்றவர்.



புனிதமானவர் என இறைவனின் வஹி.



உம்மு அப்துல்லாஹ் என்ற பெயர்

14
ஹதீஸ்கள் அறிவிப்பு
2210. பெண்களில் அதிக ஹதீஸ்கள்



அறிவித்த பெருமையைப் பெற்றவர்.



பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்கங்களும்

மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ M.A

சந்தேகமின்றி ஒரு விசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்க வேண்டும். அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான். உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

(
நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
(
அல்குர்ஆன் 2: 186)

இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்.
(
அல்-குர்ஆன் 40: 60)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை,

1.
அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2.
அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.
3.
அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்.

ஆகவே வல்ல இறைவன் அல்லாஹுவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவன் நமது பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும் மன்னிப்பான்.
 
ஆனாலும், குறிப்பாக இங்கு கூறப்படும் நேரங்கள், நிலைகள், இடங்களில் பிரார்த்தனைகளை அதிகமாக செய்ய வேண்டும். அதேபோன்று பிரார்த்தனை செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால் அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வான்.

பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்

1.
தூய மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

2.  
பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

3.  
பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4.
அவசியத்தைக்கூறி பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. (அதாவது அல்லாஹ்விடம் ஒன்றிரண்டு முறைகள் பிரார்த்தனை செய்து, கேட்டது கிடைக்கவில்லையானால், அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு, பிரார்த்தனையை விட்டுவிடுவது கூடாது)

5.
உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.

6.
சந்தோஷ நேரத்திலும், கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

7.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது.

8.  
தன் குடும்பம், பொருள், பிள்ளை மற்றும் தனக்கும் கேடாக பிரார்த்தனை செய்யக் கூடாது.

9.
சத்தத்தை மிகவும் உயர்த்தாமலும் மிகவும் குறைக்காமலும் அவ்விரண்டிற்கும் மத்தியில், நடு நிலையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

10.
செய்த பாவத்தை மனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக பிழை பொறுப்புத் தேடி, அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை உளமாற ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.

11.
துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

12.  
தெளிவான உள்ளத்தோடும் பயபக்தியோடும் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்து, அவனது தண்டனையிலிருந்து பயந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

13.
மற்றவர்களின் பொருளை எடுத்து அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அந்தப் பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபின் அப்பாவத்திற்காக தவ்பாச் செய்ய வேண்டும்.

14. (
பிரார்த்திற்கும் ஒவ்வொன்றையும்) மும்மூன்று தடவை பிரார்த்திக்க வேண்டும்.

15.
கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

16.
பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்.

17.
முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும்.

18.
ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். "துஆ" ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

19.
முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். (இறைவா! எனது பாவங்களையும், இன்னாருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக என்று கேட்பது போல்).

20.
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லது உயிரோடு வாழக்கூடிய நல்லவர்களிடம் (தனக்காக) பிரார்த்தனை செய்யும்படி கேட்டு (இஸ்லாத்தில் வஸீலா தேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இம்மூன்று வகைகளில் ஒன்றைக் கொண்டு) அல்லாஹுவிடம் உதவி (வஸீலா) தேடவேண்டும்.

21.
உணவு, குடிபானங்கள் அணியும் ஆடை இவைகள் ஹலாலானவைகளாக இருக்க வேண்டும்.

22.
பாவமான காரியங்களுக்காக அல்லது இரத்த உறவுகளை முறிப்பதற்காக பிரார்த்தனை செய்யக் கூடாது.

23.
பிரார்த்தனை செய்பவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.
 
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்

1. இரவின் நடுப்பகுதி
2.
இரவில் கடைசி மூன்றாவது பகுதி
3.
ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)
4.
அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
5.
பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது
6.
மழை பொழியும் போது
7.
உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது
8. (
தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது
9.
ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை
10.
அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை
11.
தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை
12.
பிரயாணியின் பிரார்த்தனை
13.
பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை
14.
சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
15.
நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
16.
கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.
17.
ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் பிரார்த்தனை.
18. (
முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் பிரார்த்தனை
19.
நோன்பாளியின் பிரார்த்தனை.
20.
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் பிரார்த்தனை