Wednesday, April 18, 2012

தஃப்ஸீர-அல்குர்ஆன் விளக்கவுரை - அல் ஃபாத்திஹா-1

அல்ஃபாத்திஹா
(தஃப்ஸீர-அல்குர்ஆன் விளக்கவரை)
الفاتحة (مكية)7
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ{1
 الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ{2}
الرَّحْمـنِ الرَّحِيمِ{3 
مَالِكِ يَوْمِ الدِّينِ{4
 إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ{5}
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ{6
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَالضَّالِّينَ{7
ஃபாத்திஹா (மக்கிய்யா)
மக்காவில் அருளப்பட்டது. 7 வசனங்கள்.
1.  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் துவங்குகிறேன்.
2. புகழ் யாவும் அகில உலகையும் படைத்துக் காக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
3. (அவன்) அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையோன்.
4. நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி.
5. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
6. (இறைவா!) எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக.
7. (அது)எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. உன் கேபத்திற்காளானோர் , வழிதவறியோர் வழியுமல்ல.
மக்கிய்யா மதனிய்யா :
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் 86 அத்தியாயங்கள் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்வின் போதும்,28அத்தியாயங்கள் மதீனா வாழ்வின் போதும் அருளப்பட்ட வையாகும். மக்கிய்யா மக்கா வாழ்வுடன் தொடர்புடையது என்றும் மதனிய்யா மதீனா வாழ்வுடன் தொடர்புடையது என்றும் குறிப்பிடப்படும்.
இருவகையான அத்தியாயங்களைக் கவனித்தால் இரண்டுக்கு மிடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மக்கா மக்கள் (சிலர் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தும் உயர்ந்த இலக்கிய நடையில் பேசுவோராக இருந்தனர். விரிவான கருத்துக் களை மிகச்சுருக்கமாகப் பேசுவோராகவும், அவ்வாறான பேச்சு களையே எளிதில் புரிந்து கொள்வோராகவும் இருந்தனர். இதன் காரணமாக மிகவும் இரத்தினச்சுருக்கமாக  மிக உயர்ந்த இலக்கிய நடையில் மக்கா வசனங்கள் அருளப்பட்டன.
ஆனால் மதீனா யூதர்கள் எளிதாகவும் விரிவாகவும் பேசுவோராக இருந்தனர். அவ்வாறான பேச்சுகளையே புரிந்து கொள்வோராக மிருந்தனர். எனவே, மதனிய்யா வசனங்கள் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விரிவாக ஆருளப்பட்டன.
மக்கிய்யா அத்தியாயங்களில் பெரும்பாலும் சட்டப்பிரச்சனைளகள் விரிவாகக் கூறப்படவில்லை. உலகம் அழியும் நாள், அதன் பயங்க ரங்கள்அதன் பிறகு ஏற்படும் மறுமை வாழ்க்கை, ஏகத்துவ நெறிகள், இஸலாத்தின் கொள்கைகள், எதிரிகளின் வீண் விவாதங் களுக்கு பதில் கூறுவது பொன்றவை இடம் பெறுகன்றன.
மதனிய்யா அத்தியாயங்களில் யூதர்களின் இரட்டை வேடங்கள், கபட நாடகங்கள், இறைதேங்களில் அவர்களின் கைவரிசைகள் போன்ற வைகள்வணக்க வழிபாடுகள்,அரசியல் சட்டவிளக்கங்கள் போர் கால நடவடிக்கைகள்,கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் பிரச்சனைகள், இல்லற வாழ்வில் எழும் பிரச்சனைகள், சொத்துப் பங்கீடுகள் போன்றவையும், இன்னும் பலசட்டஙகளும் இடம் பெற்றுள்ளன.
முதல் அத்தியாயமான அல் ஃபாத்திஹா அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் மக்கிய்யா வகையைச் சார்ந்ததாக குறிப்பிடப்படும்.
أَعُوذُ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِِ
அஊது பில்லாஹ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
2:67 ,03:36, 16:98, 11:47, 19:18, 23:97, 23:98,114:1,113:1.என்ற வசனத் தொடர்  ஆகிய ஒன்பது வசனங்களில் அஊது என்பது ஏழு இடங்க ளிலும், மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்பது இரு இடங்களிலும் குர்ஆனில் வருகின்றன.
இரு தொடர்களையும் இணைத்தே ஓத வேண்டுமென்பதை நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.
அஊது எப்போது ஓதவேண்டும்?
இதில் அறிஞர்கள் (இமாம்கள்) பல்வேறு கருத்துகளை குறிப்பிடுகின்றனர்.
முதலாவது கருத்து: குர்ஆனை ஓதி முடித்த பின்னர் ஓதுதல் வேண்டும்.  இக்கருத்தைகாரிகள்என்னும் குர்ஆனிய கலையைக் கற்றறிந்தோரும், மற்றும் சிலரும் முன் வைக்கின்றனர். தமது கூற்றுக்கு ஆதாரமாக அந்தஹ்ல் அத்தியாயத்தின் 98 வது வசனமாக இடம் பெறும்.
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (16:98
என்ற இறை வசனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். அத்துடன் குர்ஆன் ஓதும் வணக்கத்தை புரிந்த பின்னர் ஏற்படுகின்ற தற்பெருமை போன்ற உள நோய்கள் நீங்கவும் அது காரணமாக அமையும் என்றும் பகுத்தறிவு ரீதியான காரணத்தையும் முன் வைக்கின்றனர்.
இரண்டாவது கருத்து: ஓதுவதற்கு முன்னரும், பின்னரும் அஊது கூறவேண்டும். (இது பலவீனமாக கூற்றாகும்)
மூன்றாவது கருத்து : (இது சரியானதாகும்) இக்கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளனர். இதனால் ஓதுமுன் உள்ளத்தில் ஊசலாடுகின்ற தீய எண்ணங்களை தடுப்பதற்கு ஏதுவாக அமையும் எனக் கூறுகின்றனர்.
முதலாவது பிரிவினருக்கான மறுப்பு:
குர்ஆனை ஓதி முடித்தால்என நீங்கள் முன்வைக்கின்ற திருமறை வசனத்தின் பொருள் அதுவல்ல என்றும் மாறாக குர்ஆனை ஓத ஆரம்பித்தாலஎன்பதே அதன் சரியான பொருளாகும், எனவும் வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக அல்மாயிதா அத்தியாத்தில் இடம் பெறும் ஆறாவது வசனத்திற்கு வழங்கும் கருத்தை கொடுக்கின்றனர். அதில்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَين
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்காக தயாரானால் உங்களின் முகங்களையும், உங்கள் கைகளையும்
கழுவிக் கொள்ளுங்கள்!என இடம் பெறுகின்றது. எனவே அதில் நீங்கள் தொழுது முடித்தால் உளு செய்யுங்கள் என எவ்வாறு பொருள் கொள்ள மாட்டீர்களோ அதே போன்றுதான் குர்ஆனை ஒதிமுடித்தால் அஊது ஓதுங்கள் என பொருள் கொள்ளாது குர்ஆன் ஓத ஆரம்பித்தால் என பொருள் கொள்ள வேண்டும் என விளக்குகின்றனர்.
அஊது ஓதுவதால் கிடைக்கும் பயன்கள்
1. வாயிலிருந்து வெளிவரும் கேளிக்கைகள், தீயவார்த்தைகள் வீணானபேச்சுகள், போன்றவைகளுக்கு தூய்மை கிடைப்பதுடன் அது பரிசுத்தமும் அடைகின்றது.
2. திருமறைக் குர்ஆனை ஒதுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுதல். (முன்னுரிமை அளித்தல்)
3. அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்பு தேடுதல்.
4. பகிரங்க விரோதியான சைத்தானை எதிர் கொள்வதில் அல்லாஹ்வின் சக்திக்கும், அடியானின் பலவீனம், இயலாமை ஆகியவற்றிற்குமிடையே காணப்படும் வேறுபாட்டை அறிதல்.
இஸ்திஆதாவின் பொருள்
அஊது பில்லாஹி மினஷ் ஷைய்த்தானிர்ரஜீம் என்பதன் பொருள்: அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக வீசப்பட்ட சைத்தான் அவனது மார்க்கம் மற்றும் உலகியல் காரியங்களில் தீங்கிழைத்தல், அவன் எடுத்து நடக்குமாறு ஏவப்பட்டதை தடுத்தல், தவிர்த்து நடக்குமாறு பணிக்கப்பட்டதை செய்யுமாறு தூண்டுதல் ஆகிய தீங்கிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றேன் என்பதாகும்.
அஊது ஓதுவதன் சட்டம்
அறிஞர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்:-
1. நபி (ஸல்)அவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
2. அதனால் அஊது ஓதுவது ஸூன்னத்தான நடைமுறையாகும்.
3. மேலும் அது(அஊது)சைய்த்தானிலிருந்து பாதுகாப்புத்தருகிறது.
ஷைத்தான்> றஜீம் என்ற சொற்களின் கருத்த
‘” ஷைத்தான்என்ற சொல்ஷதனதூரமானான் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவன் இயற்கையிலேயே தூரமானவன். நன்மையானவற்றிலிருந்து விலகிநிற்பவன். அவனது தீய நடவடிக்கைகளால் தூரமாக நிற்பவன் என்ற கருத்தில் ஆளப்பட் டுள்ளது எனவும், அல்லது ஷாத்த எறிந்தது, எறிந்தான் என்ற வேர்ச் சொல்லிலிநு;து பிறந்தது எனக் கொள்ளலாம். அவன் நெருப்பினால்  படைக்கப்பட்டவன் என்பதையும் கவனத்தில் கொள்ளப் பட்டுள்ளது. றஜீம் சகல நலவிலிருந்து தூர எறியப்பட்டவன் அல்லது தூரமானவன் என்பது பொருள்.

No comments:

Post a Comment